பணப்பையை திருடிய 2 பெண்கள் சிக்கினர்

பணப்பையை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-23 21:35 GMT


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 45), சேலை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மகனுடன் டவுன்பஸ்சில் ஏறி மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அவர் வைத்திருந்த கட்டைபையில் இருந்த சுருக்குபையை ஒரு பெண் திருடி செல்வதை பார்த்தார். உடனே அந்த பெண்ணை விரட்டி சென்ற போது அந்த பெண் வேறு ஒரு பெண்ணிடம் அந்த பையை கொடுத்து விட்டார். இது குறித்து லட்சுமி சத்தம் போட்டதும் அவரது மகன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் கூடலூர் பகுதியை சேர்ந்த கீதா (40), சுமதி (40) என்பதும், அவர்கள் 1,910 ரூபாய் வைத்திருந்த சுருக்குபையை திருடியதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்