மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது

மதுபாட்டில் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.;

Update: 2023-06-18 18:45 GMT


ரிஷிவந்தியம், 

பகண்டை கூட்டுரோடு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார்குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, லாலாபேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்