சாராயம் விற்ற 2 பெண்கள் கைது
மயிலம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மயிலம்,
மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்எடையாளம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் (வயது 68), மகாலட்சுமி (58) ஆகியோர் தனித்தனியாக அதே பகுதியில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 20 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.