மதுவிற்ற 2 பெண்கள் கைது

மதுவிற்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-12 19:06 GMT

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி (வயது 45) என்பவர் மதுவிற்பதாக கிடைத்த தகவலின் படி அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவை சேர்ந்த கமலா (45) என்பவரது வீட்டில் சோதனை நடத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஈஸ்வரி, கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்