ஆட்டை நாய் கடித்ததால் தகராறு 2 பெண்கள் கைது

ஆட்டை நாய் கடித்ததால் ஏற்பட்ட தகராறில் 2 பெண்களை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2023-08-18 18:38 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் மனைவி மஞ்சு (வயது 35). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் நாகப்பன் மனைவி கஸ்தூரி (42). இந்நிலையில் கஸ்தூரி வளர்த்து வரும் ஆடு, மஞ்சுவின் தோட்டத்தில் மேய்ந்தபோது அந்த ஆட்டை மஞ்சு வளர்த்து வரும் நாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு ஒருவரையொருவர் திட்டி தாக்கிக்கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கஸ்தூரி, மஞ்சு ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்