2 விஷப்பாம்புகள் பிடிபட்டன
விக்கிரமசிங்கபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் 2 விஷப்பாம்புகள் பிடிபட்டன.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அகஸ்தியர்பட்டி மின்நகர் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் புகுந்ததாக அம்பை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு சுமார் 6 அடி கொண்ட 2 கண்ணாடி விரியன் விஷப் பாம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பாம்புகளும் தனித்தனியாக பத்திரமாக மீட்கப்பட்டது.
தொடர்ந்து பிடிபட்ட 2 விஷப் பாம்புகளை பாபநாசம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.