உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 2 வாகனங்கள் பறிமுதல்
வந்தவாசியில் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச்சாலை அருகே செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கே.கருணாநிதி இன்று அந்த வழியாக வந்த வாகனங்களை ஆய்வு செய்தார்.
அப்போது உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட ஒரு பயணிகள் வேன், ஒரு மினிசரக்கு வாகனம் ஆகிய 2 வாகனங்களை அவர் பறிமுதல் செய்தார்.
இதைத்தொடர்ந்து 2 வாகனங்களும் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.