2 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம்

பட்டுக்கோட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-07 20:37 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது. வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு சக்கரவாகனங்களில் தீப்பிடித்தது

பட்டுக்கோட்டை ஏ.வி. குளத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபிக். இவருடைய மனைவி நஸ்ரத் பீவி. இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தை வாடகைக்கு விட்டுவிட்டு, மேல் தளத்தில் வசித்து வந்தார். இவருடைய மகளும். மகனும் பயன்படுத்தும் ஸ்கூட்டரும், மோட்டார் சைக்கிளும் கீழ் வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படிவழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

இந்த நிலையில் திடீரென்று கீழ் வீட்டில் வசிப்பவர்கள் இரவு 12 மணியளவில் வாசலில் நிறுத்தியுள்ள 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிவதாக முகமது ரபிக்குக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதனால் அவர் தனது குடும்பத்துடன் கீேழ வந்து தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன.

இதுகுறித்து நஸ்ரத் பீவி பட்டுக்கோட்டை நகர போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 இரு சக்கர வாகனங்களில் எப்படி தீப்பிடித்தது?, மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்