கற்கள் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் கற்கள் கடத்திய 2 லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி கனிம வள உதவி இயக்குனர் பொன்னுமணி தலைமையில் அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஊசல்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற 2 லாரிகளை சோதனை செய்தனர். அதில் இட்டிக்கல் அகரம் பகுதியில் இருந்து கற்கள் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.