2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் காயம்
நீடாமங்கலம் அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
நீடாமங்கலம்:
நாகையில் இருந்து கடல் மணல் ஏற்றிக்கொண்டு நேற்று மாலை அரியலூர் பகுதிக்கு டாரஸ் லாரி சென்று கொண்டிருந்தது. நீடாமங்கலத்தை அடுத்த ஓடத்துறை கிராமம் அருகே சென்ற போது எதிரே சாலை விரிவாக்க பணிக்காக செம்மண் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு டாரஸ் லாரியும் ஒரு வளைவில் திரும்பிபோது நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிரைவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். 2 லாரிகள் மோதிக்கொண்ட விபத்தால் தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் மாலை 6 மணி முதல் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சரிசெய்தனர்.