2 ரெயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிக நிறுத்தப்படும்

சேலம்- சென்னை இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-11-09 19:30 GMT

சூரமங்கலம்:-

சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22153) மற்றும் சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22154) ஆகிய ெரயில்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 6-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும் என ெரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ெரயில் இரவு 1.13 மணிக்கு மேல்மருவத்தூர் வந்தடையும். பின்னர் அங்கிருந்து 1.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் சேலம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ெரயில் இரவு 1.55 மணிக்கு மேல்மருவத்தூர் சென்றடையும், பின்னர் இங்கிருந்து 1.57 மணிக்கு புறப்பட்டு சென்றடையும். இந்த தகவலை சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

===

Tags:    

மேலும் செய்திகள்