குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது
குட்கா விற்ற 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
கோவை சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயபாண்டியன் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் நேற்றுதிடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக அதன் உரிமையாளர் அழகேசன் (வயது 52) கைது செய்யப்பட்டார்.இதே போல காமராஜர்ரோடு, சக்கரை செட்டியார் காலனியில் ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.அங்கும் ஏராளமான குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மளிகை கடை நடத்தி வந்த நீலி கோணாம்பாளையம் கே. மணி (48) கைது செய்யப்பட்டார்.இவர்கள் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.