பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகள் கைது

கயத்தாறு பகுதியில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-07-03 13:08 GMT

கயத்தாறு:

கயத்தாறு பகுதியில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாபாரி

கயத்தாறை சேர்ந்தவர் சங்கர்(வயது 40). வியாபாரி. இவர் அங்குள்ள சுங்கச்சாவடி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசு தடை செய்துள்ள குட்கா, புகையிலை பொருட்கள் போன்றவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைைமயில் போலீசார் அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

புகையிலை பொருட்கள் பறிமுதல்

மேலும், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்ட இருந்த 2 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதேபோல் நாகலாபுரம் கிராமத்தில் வியாபாரியான வெயில்முத்து ( 30) என்பவரது பெட்டிக்கடையிலும் தொடர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதுடன், அங்கு பதுக்கி வைத்திருந்த 4 கிலோ புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

இந்த சம்பவங்கள் தொடர்பாக கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த 2 பேரையும் கைது செய்தனர். அந்த 2 பேரும் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்