2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

பழனியில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-08-31 22:00 GMT

பழனியில் உள்ள கடை, வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நகராட்சி ஆணையர் பாலமுருகன் தலைமையில் நகர்நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பழனி நகர் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 12 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 டன் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மீண்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஊழியர்கள் அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்