சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மன்னார்குடியில், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-24 18:45 GMT

மன்னார்குடி:

மன்னார்குடியில், சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அாிசி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜவீதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு சரக்கு வேனை போலீசாா் நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு வேனை நிறுத்திவிட்டு அதன் டிரைவா் தப்பி ஓடிவிட்டார். பின்னர் சரக்கு வேனை போலீசார் சோதனை செய்ததில் வேனில் சட்டவிரோதமாக 2½ டன் ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதைத்தொடர்ந்து 2½ டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் திருவாரூர் குடிமைபொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்