அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல்
பேரளத்தில் இருந்து சென்னைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.;
நன்னிலம்:
பேரளத்தில் இருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் சன்னரக நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு நன்னிலம், குடவாசல் பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் லாரிகள் மூலம் பேரளம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.. பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்குரெயில் சென்னை கொருக்குப்பேட்டைக்கு புறப்பட்டு சென்றது.