2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்

வடகிழக்கு பருவமழையையொட்டி 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-10-17 18:45 GMT

கோத்தகிரி, 

வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடரை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை சார்பில், நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைபடாமல் இருக்கவும், குடியிருப்புகள் பாதிக்காமல் இருக்க தற்காலிக தடுப்புச்சுவர்கள் அமைக்கவும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் கூறும்போது, வடகிழக்கு பருவமழையை சமாளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தால், உடனடியாக அகற்றும் வகையில் மின் வாள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள், மண்சரிவு ஏற்பட்டால் அதனை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரம் அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்