தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்தி மிரட்டிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மீளவிட்டானை சேர்ந்த சரவணன் (வயது 24), கபிஸ் (30) ஆகியோர், அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் அருகே நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் ஜெகதீஷ் (21), முத்துப்பாண்டி மகன் பாலசிங் (40) ஆகிய 2 பேரும் வந்து உள்ளனர். அவர்கள் 2 பேரும் சரவணன், கபிஸ் ஆகியோரிடம் மது போதையில் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ், பாலசிங் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் மீது ஏற்கனவே ஒரு கஞ்சா வழக்கும், பாலசிங் மீது 13 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.