2 வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை
2 வாலிபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுதன் (வயது 25). இவர் 16 வயது பள்ளிக்கூட மாணவியை கடத்திச்சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். சுதனுக்கு உடந்தையாக கார் டிரைவர் மாரிசாமி (34) என்பவர் இருந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சுதன், மாரிசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இ்ந்த வழக்கை நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து சுதன், மாரிசாமி ஆகிய 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். மேலும் சுதனுக்கு ரூ.16 ஆயிரமும், மாரிசாமிக்கு ரூ.14 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.