செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது
கூடலூர் பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கூடலூர்,
கூடலூர் பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பந்தலூர் தாலுகா கையுன்னி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் பஸ்சுக்காக நின்றிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை காணவில்லை. இதைத்தொடர்ந்து பிரகாஷ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகராஜ் உள்ளிட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன் திருடிய கூடலூர் காசிம்வயலை சேர்ந்த சைஜு (வயது 20), ஓவேலி பேரூராட்சி முல்லை நகரை சேர்ந்த விஜயகுமார் (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.