சாராயம் காய்ச்சிய 2 வாலிபர்கள் கைது
அரகண்டநல்லூர் அருகே சாராயம் காய்ச்சிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூர் அருகே உள்ள தண்டரை கிராம மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் மலைப்பகுதியில் அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் முருகன்(வயது 35), சீனிவாசன் மகன் ஏழுமலை(24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. 20 லிட்டர் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டது.