விஷம் குடித்து 2 மாணவிகள் தற்கொலை முயற்சி

கடலூர் தனியார் பள்ளி விடுதியில் விஷம் குடித்து 2 மாணவிகள் தற்கொலைக்கு முயன்றனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2023-08-01 18:45 GMT

கடலூர்:

காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 2 மாணவிகள் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதற்காக இருவரும் பள்ளி விடுதியிலேயே தங்கி இருந்தனர். இந்தநிலையில் அதில் ஒரு மாணவி நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை விடுதி நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காரணம் என்ன?

இதற்கிடையே நேற்று மற்றொரு மாணவியும் விஷம் குடித்தார். அவரும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், விடுதியில் தங்க விருப்பம் இல்லாததால் 2 மாணவிகளும் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இந்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்