ஊத்துக்குளி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அக்காள்- தங்கை பரிதாபமாக பலியாயினர். அவர்களை அழைத்துச் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

ஊத்துக்குளி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அக்காள்- தங்கை பரிதாபமாக பலியாயினர். அவர்களை அழைத்துச் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-07-26 13:24 GMT

ஊத்துக்குளி,

ஊத்துக்குளி அருகே ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அக்காள்- தங்கை பரிதாபமாக பலியாயினர். அவர்களை அழைத்துச் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவிகள்

திருப்பூரை சேர்ந்தவர் பூபேஷ்குமார். இவருடைய மனைவி சுமதி (வயது 35). இவர்களுக்கு கனிஷ்கா (11), சஷ்விகா (7) என 2 குழந்தைகள் இருந்தனர். கணவர் பூபேஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த சுமதி தனது 2 குழந்தைகளுடன் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். கனிஷ்கா 6-ம் வகுப்பும், சஷ்விகா 2-ம் வகுப்பும் படித்தனர்.

குழந்தைகள் இருவரும் தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம் போல் பள்ளி வாகனம் வந்தது. ஆனால் குழந்தைகள் இருவரும் தயாராகவில்லை என்பதால் தாமதம் ஏற்பட்டது. இதனால் பள்ளி வாகனத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை.

எனவே சுமதியின் தாய்மாமா தங்கராஜ் (60), ஸ்கூட்டரில் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அருகில் புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டரின் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

மாணவிகள் பலி

தலையில் பலத்த காயம் அடைந்த கனிஷ்கா மற்றும் சஷ்விகா இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த தங்கராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனிஷ்கா, சஷ்விகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் தனது 2 குழந்தைகளையும் இழந்த தாய், அவர்களின் உடல்களை பார்த்து கதறி துடித்த சம்பவம் அங்கிருந்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் (50) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளிக்கு சென்ற அக்காள்-தங்கை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்