கோவில் திருவிழாவில் 2 பேருக்கு கத்திக்குத்து

வேலூரில் நடந்த கோவில் திருவிழாவில் 2 பேருக்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-08 19:01 GMT

கோவில் திருவிழா

வேலூர் வாணியர் வீதியில் நேற்று ஒரு கோவில் திருவிழாவையொட்டி சாமி ஊர்வலம் நடந்தது. அப்போது வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 23) என்பவருக்கும், ஞானவேல் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதைப்பார்த்த அதேபகுதியை சேர்ந்த ராஜேஷ் (20), அரவிந்த் (21), கார்த்திகேயன் (29) ஆகியோர் தடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமார் கத்தியை எடுத்து ராஜேஷ், அரவிந்த் ஆகியோரை குத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகேயனையும் தாக்கி உள்ளார். காயமடைந்த அவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வாலிபர் கைது

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்