தாயை கத்தியால் குத்த முயன்ற 2 மகன்கள் கைது

தாயை கத்தியால் குத்த முயன்ற 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-27 19:28 GMT

விருதுநகர் ஆனைக்குழாய் தெருவை சேர்ந்தவர் ராணி (வயது 47). இவரது கணவர் சிவக்குமார் இறந்துவிட்டார். இவரது மகன்கள் ரகு என்ற எம்.ஜி.ஆர். (வயது 22), ராஜலிங்கம் (20) ஆகிய 2 பேரும் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வந்து ராணியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் ராணியிடம் பணம் கேட்டபோது அவர் மறுக்கவே அவரை தாக்கியதோடு அவரைகத்தியால் குத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள வர்கள் வந்ததும் கத்தியை எறிந்து விட்டு மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராணி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார், ரகு என்ற எம்.ஜி.ஆர்., ராஜலிங்கம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்