வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது

நாட்டறம்பள்ளி அருகே வீட்டுக்குள் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது;

Update: 2022-06-19 16:12 GMT


நாட்டறம்பள்ளியை அடுத்த அக்ராகரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது வீட்டுக்குள் நல்லபாம்பு ஒன்று புகுந்தது. உடனடியாக இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

அதேபோல் நாட்டறம்பள்ளி பூசாரியூர் பகுதியை சேர்ந்த அரிஷ் என்பவரது வீட்டுக்குள் சாரைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்