புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு 'சீல்'
புகையிலை பொருட்கள் விற்ற 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி:
உணவு பாதுகாப்பு துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்படி திருச்சியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை மற்றும் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு ஏற்கனவே புகையிலை பொருட்கள் விற்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்து 2 கடைகளுக்கும் மீண்டும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அந்த கடைகளை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.