போதை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது
போதை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது செய்யபபட்டனர்.;
ஜோலார்பேட்டை,
போதை பொருட்கள் விற்ற 2 கடைக்காரர்கள் கைது செய்யபபட்டனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை தடுக்க இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். ஆத்தூர் குப்பம் பகுதியில் நடத்திய சோதனையில் லிங்கன் என்பவரின் மகன் சரவணன் (வயது 44), சந்தோஷ்குமார் மனைவி ஷோபனா (32) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ்' உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையெடுத்து சரவணன் மற்றும் ஷோபனாவை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் போலீசார் திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.