2 கூரை வீடுகள் எரிந்து சேதம்

தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சேதம்;

Update: 2023-06-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சிறுவந்தாடு காந்தி நகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் குப்பு. இவருடைய கூரை வீட்டில் நேற்று முன்தினம் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, அருகில் இருந்த ராமச்சந்திரன் என்பவரின் கூரை வீட்டுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இது குறித்து உடனே அவர்கள், விழுப்புரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்ததில் வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ.2 லட்சமாகும். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்