ரூ.16½ லட்சத்தில் 2 ரேஷன் கடைகள்

மண்டலநாயனகுண்டா ஊராட்சியில் ரூ.16½ லட்சத்தில் 2 ரேஷன் கடைகள் கட்டும்பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

Update: 2023-07-27 18:26 GMT

கந்திலி தெற்கு ஒன்றியம், மண்டல நாயனகுண்டா ஊராட்சியில் காட்டுக்கொல்லை மற்றும் மேல்புதூர் கிராமங்களில் புதிய ரேஷன் கடைகள் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் தேவராஜி எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் வீதம் ரூ.16 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கி ரேஷன் கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராஜா ராணி தாமோதரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.தேவராஜி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்றம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் வெண்மதி சிங்காரவேலன், துணைத் தலைவர் டி.தேவராஜி, ஒன்றிய நிர்வாகிகள் துரைசாமி, மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தன், அசோகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் தாமோதரன், நாகராஜ், அன்புரோஸ், இந்துமதி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்