கிராவல் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிராவல் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-11 12:07 GMT

காங்கயம்

ஊதியூர் அருகே கிராவல் மண் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், திருப்பூர் மண்டலம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை பறக்கும் படை உதவி புவியியலாளர் பிரியாவிற்கு (28) கடந்த 8-ந் தேதி மாலை கிராவல் மண் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே புங்கந்துறை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வல்லியம்பாளையம் நால்ரோடு என்ற இடத்தில் கிராவல் மண் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு டிப்பர் லாரி வந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதி சீட்டு இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து டிரைவரை ஊதியூர் போலீஸ் நிலையத்திற்கு லாரியை கொண்டு செல்லுமாறு பிரியா அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து லாரியில் இருந்த டிரைவர் லாரியை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல மறுத்ததாகவும், தொடர்ந்து வற்புறுத்தியதால் பிரியாவை, அங்கிருந்த ஜே.சி.பி ஆபரேட்டரும், லாரி ஓட்டுனரும் கொல்ல முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 2 பேரும் தப்பி ஓடியுள்ளார்கள்.

இது குறித்து பிரியா ஊதியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரி டிரைவர் காங்கயம் அருகே நல்லூரை சேர்ந்த ராசு (38) என்பதும், ஜே.சி.பி ஆப்ரேட்டர் காங்கயம் அருகே துண்டுக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசு (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தப்பு ஓடிய ராசு மற்றும் அன்பரசு 2 பேரையும் ஊதியூர் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் அன்பரசையும், நேற்று காலை ராசுவையும் ஊதியூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்த 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்