மதுபானம் வைத்திருந்த 2 பேர் சிக்கினர்

பெரியகுளம் தென்கரை பகுதியில் மதுபானம் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-10 18:45 GMT

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டி.கள்ளிப்பட்டி தீப்பெட்டி பழைய தொழிற்சாலை அருகில் பையில் மதுபாட்டில்களுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே ஊரை சேர்ந்த முத்தையா (வயது 41) என்பதும், விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கைலாசப்பட்டி விநாயகர் கோவில் பகுதியில் மது பாட்டில்கள் வைத்திருந்த இந்தியன் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்