வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம்

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-04-26 20:24 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 52). இவர் சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிவகாசி-விருதுநகர் மெயின் ரோட்டில் உள்ள நாரணாபுரம் விலக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மலைச்சாமியின் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மலைச்சாமியின் உறவினர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் சிவகாசி புது தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் காளீஸ்வரன் (20) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் காளீஸ்வரன் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து காளீஸ்வரனின் தாய் தங்கமாரி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்