பெண் உள்பட 2 பேர் கைது

சாராயம் பதுக்கி வைத்திருந்த பெண் உள்பட 2 பேர் கைது ெசய்யப்பட்டனர்.

Update: 2023-05-15 12:48 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் குளத்து மேடு பகுதியில் வசிக்கும் சிவாஜி மனைவி ரேவதி (வயது 42) என்பவர் தனது வீட்டின் பின்புறம் லாரி டியூபில் 40 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தார்.

மேலும் இதே ஊரைச் சேர்ந்த கண்ணப்பன் மகன் விஜயகாந்த் (32) என்பவர் வண்ணாங்குளம் குன்று மேடு பகுதியில் லாரி டியூபில் 40 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்திருந்தார்.

இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சென்று 80 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து ரேவதி, விஜய்காந்த் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்