திட்டக்குடி அருகே சரக்கு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் உள்பட 2 பேர் கைது

திட்டக்குடி அருகே சரக்கு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2023-02-26 18:45 GMT

கடலூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி ஆகியோர் மேற்பார்வையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் மற்றும் முருகானந்தம், ராஜா ஆகியோர் நேற்று திட்டக்குடி தாலுகா பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் அடரி களத்தூர் வடக்கு தெருவில் ரோந்தில் ஈடுபட்ட போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 50 கிலோ எடையுள்ள 10 சாக்கு மூட்டைகளில் மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. இதையடுத்து அந்த வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கள்ளக்குறிச்சி அசகளத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் டிரைவர் செல்வமணி (வயது 31), திட்டக்குடி ஜாயேந்தல் தெற்கு தெரு கோபால் மகன் சேகர் ஆகிய 2 பேர் என்றும், அவர்கள் அந்த பகுதி மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசியையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்