தொழிலாளி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை

வாழை வியாபாரியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-10-12 18:45 GMT

நாகர்கோவில்:

வாழை வியாபாரியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி உள்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

முன்விரோதம்

கொட்டாரம் பொட்டல்குளம் பகுதியை சோ்ந்தவர் கண்ணன் (வயது41), வாழை வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் (29) என்பரின் மனைவிக்கும் இடையே பழக்கம் இருந்தது. இதனை ரதீஷ் கண்டித்தார். இதனால் கண்ணனுக்கும், ரதீசுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 16-5-2018 அன்று இரவு கண்ணன் வீட்டிற்கு ரதீஷ் மற்றும் அவரது நண்பர் பொட்டல் குளத்தை சேர்ந்த அஜய் (24) ஆகியோர் சென்றனர். அவர்கள் கண்ணனிடம் பேச வேண்டும் என கூறி அவரை வீட்டின் வெளியே அழைத்து சென்றனர்.

3 ஆண்டு சிறை

அப்போது கண்ணனுக்கும், ரதீசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரதீஷ் மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் சேர்ந்து கண்ணனை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில ரதீஷ் மற்றும் அஜய் ஆகியோர் மீது கன்னியாகுமரி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள 2-வது கூடுதல் சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி அசன் முகமது விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். தீர்ப்பில் ரதீஷ் மற்றும் அஜய் ஆகியோரை குற்றவாளியாக அறிவித்து அவர்களுக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில் மூர்த்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்