சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மண்டைக்காடு அருகே சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-19 18:45 GMT

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு அருகே சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மண்டைக்காடு அருகே உள்ள பிலாவிளையை சேர்ந்தவர் ஞானராபி (வயது 52). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்த மர்ம ஆசாமிகள் ஞானராபி வாங்கி வைத்திருந்த புதிய சைக்கிள் மற்றும் ஒரு வெண்கல பாத்திரத்தையும் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.13 ஆயிரம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஞானராபி மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த டேவிட்ராஜ் (28) மற்றும் பரம்பையை சேர்ந்த பால்ராஜ் (38) ஆகியோர் தான் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து திருட்டு போன சைக்கிள் மற்றும் வெண்கல பாத்திரத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்