தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில்மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி எழில்நகர் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 28). இவர் எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தருவைக்குளம் துரைச்சாமிபுரத்தை சேர்ந்த அய்யனார் மகன் முனியசாமி (37), மாடசாமி மகன் முருகன் (30) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அந்த 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் மீட்டனர். கைது செய்யப்பட்ட முனியசாமி மீது ஏற்கனவே 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.