தரகம்பட்டி அருகே உள்ள தளிஞ்சி மேலப்பட்டி பாம்பலம்மன் கோவில் பகுதியில் குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்றை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது டிராக்டரில் சட்ட விரோதமாக ஆற்று வாரியில் இருந்து சுமார் 1 யூனிட் மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தி வந்ததாக டிராக்டர் உரிமையாளர் மேலப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (வயது 39), டிராக்டர் டிரைவர் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் (39) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணலுடன் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.