மணல் கடத்திய 2 பேர் கைது
பெரணமல்லூர் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி தலைமையில் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது முனுகப்பட்டு கிராமத்தின் அருகே செய்யாற்று படுகையில் இருந்து 3 மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த மனோகரன் (50), பூபதி (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் 3 மாட்டு வண்டிகளையும் மணலுடன் பறிமுதல் செய்தனர்.