850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

850 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-08-26 22:06 GMT

ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் மலையம்பாளையம் அருகே முத்து கவுண்டன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தியதாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவம்பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த கவியரசன் (25) ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 850 கிலோ ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்