620 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

620 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Update: 2022-09-01 20:32 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் போலீசார் நேற்று நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகில் உள்ள தெரிசனங்கோப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில், 3 பிளாஸ்டிக் சாக்குப்பைகளில் தலா 40 கிலோ வீதம் 120 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இருசக்கர வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்து அதங்கோடு பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (வயது 48) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் சிறியகொல்லா சோதனைச்சாவடி பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்தி வந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டோவை ஓட்டி வந்த வன்னியூரை அடுத்த பரக்குன்று பகுதியைச் சேர்ந்த சசி (58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்