அணில், மைனா வேட்டையாடிய 2 பேர் கைது
கடையநல்லூர் வனப்பகுதியில் அணில், மைனா வேட்டையாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் கடையநல்லூர் பிரிவு வனவர் முருகேசன், நெல்லை வனக்காவல் நிலைய வனவர் சசிகுமார், வனக்காவலர்கள் சின்னத்தம்பி, ஆனந்த், வேட்டை தடுப்பு காவலர்கள் மாடசாமி, சுப்புராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் கடையநல்லூர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது குமந்தாபுரத்தில் இருந்து சுந்தரேசபுரம் செல்லும் சாலையின் இடதுபுறம் 2 பேர் மைனா மற்றும் அணிலை வேட்டையாடி சமைக்க முயன்றனர்.
அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் வாலாஜாபேட்டை பெருமாள் மகன் கிருஷ்ணன் (வயது 24), சென்னை காந்திநகரை சேர்ந்த நாராயணசாமி மகன் கணேசன் (28) ஆகியோர் என்பதும், குமந்தாபுரத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.