தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-10 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே ரங்கப்பனூர் புது காலனி பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 45). தொழிலாளி. இவரிடம் புத்திராம்பட்டு பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் சதீஷ் என்பவர் திடீரென தகராறில் ஈடுபட்டனர். மேலும் சதீஷ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து குப்பனை திட்டி தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் சதீஷ், சிலம்பரசன், கோகுல், தமிழ்ச்செல்வன், முருகன் ஆகிய 5 பேர் மீது வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து அதில் கோகுல், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

Tags:    

மேலும் செய்திகள்