வெள்ளித்திருப்பூர் அருகே மருமகள்-மாமியாரை தாக்கிய 2 பேர் கைது

வெள்ளித்திருப்பூர் அருகே மருமகள்-மாமியாரை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-08-22 21:28 GMT

அந்தியூர்

வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள சித்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் (வயது 35). இவர் தனது விவசாய நிலத்தில் கற்களை நிறுத்தி கம்பி வேலி அமைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் மாதேசிடம், இங்கு கம்பி வேலி அமைக்கக்கூடாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் சேர்ந்து அங்கிருந்த மாதேசின் தாய், மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மாதேசுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாதேஷ் வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியார், மருமகளை தாக்கியதாக சின்னசாமி, பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த மாதேசின் தாயும், அவருடைய மனைவியும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்