தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
ஒப்பந்ததாரரை பீர்பாட்டிலால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது37). இவர் பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரபாண்டியன் கடந்த மாதம் 7-ந் தேதி மோட்டார் சைக்கிளில் அரண்மனை வழியாக ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் மணல் அள்ளுவதை சொல்லிக் கொடுக்கிறாய் என்று கூறி பீர்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் படுகாயமடைந்த சங்கரபாண்டியன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து துரத்தியேந்தல் செல்லம் மகன் முருகன் (50) என்பவரை கைது செய்தனர். இதுதொடர்பாக செவ்வூர் முருகானந்தம் மகன் கரண் (22), ராமநாதபுரம் சூரங்கோட்டை காலனி சிவக்குமார் மகன் பாட்டில் மணிகண்டன் (20) ஆகியோரை தேடிவந்தனர். தலைமறைவாக இருந்து வந்த இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.