புகையிலை விற்ற 2 பேர் சிக்கினர்

கிணத்துக்கடவில் புகையிலை விற்ற 2 பேர் சிக்கினர்.

Update: 2023-08-12 21:30 GMT


கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த அசோகன் (வயது 65) என்பவரை கைது செய்தனர்.


இதேபோல சிக்கலாம் பாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மகாலிங்கம் (67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Tags:    

மேலும் செய்திகள்