மது விற்ற 2 பேர் சிக்கினர்
தேனி அல்லிநகரத்தில் மது விற்ற 2 பேர் சிக்கினர்.
அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வெங்கலா கோவில் தெரு எஸ்.என்.ஆர். சந்திப்பு ஆகிய பகுதிகளில் மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மது விற்ற கம்பத்தை சேர்ந்த மனோகரன் (வயது 60), வெங்கலா கோவில் தெருவை சேர்ந்த கர்ணன் (38) ஆகிய 2 பேரை போலீசாா் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.