உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டதில் 2 பேருக்கு காயம்

உருட்டுக்கட்டையால் தாக்கி கொண்டதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

Update: 2022-09-03 18:36 GMT

ஆலங்குடி அருகே அண்ணா நகரில் 2 டாஸ்மாக் கடைகள் அருகருகே இயங்கி வருகின்றன. இந்தநிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர்களான ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்மக்கோட்டை கணேஷ் நகரை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 33), அண்ணா நகரை சேர்ந்த கவுதம் (28) ஆகியோர் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்