சிவகிரி:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பசும்பொன் நகர் கோட்டையூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் முகேஷ் (வயது 23). அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் வினோத் (23). இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார்கள்.
நேற்று முன்தினம் சங்கரன்கோவில் அருகே செவல்குளம் பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
சிவகிரி அருகே வந்த போது, செங்கோட்டை அருகே இலஞ்சி வாஞ்சிநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (59) என்பவர் ராஜபாளையத்திலிருந்து இலஞ்சி செல்வதற்காக காரில் வந்து கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் காரும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் முகேஷ், வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.